ரித்திகா சென் ஹீரோயினாக நடிக்க முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடித்துள்ளார். மும்பையில் செட்டிலான தமிழ் பையனைப் பற்றிய படம்தான் 'டகால்டி'. ஆக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் நரேன் இசையமைத்துள்ளார். 

ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, நவம்பர் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. 

ஆனால், அதன் பின்னர்  'டகால்டி' குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், 'டகால்டி' படத்தின் டீசர் வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த திடீர் அறிவிப்பு, ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்துள்ளது. இதனால், வரும் சண்டேவை சந்தானத்தின் ஃபன் டேவாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்தானத்தின் 'டகால்டி' படம், டிசம்பர் வெளியீடாக திரைக்குவரவுள்ளது.vv