ரியல் கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி..உருக்கமான பதிவை வெளியிட்ட கேப்ரில்லா..
தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'மேடையில் பதற்றத்தில் உன்னை பற்றி பேச மறந்து விட்டேன் என்னை மன்னித்து விடு என கேப்ரில்லா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' மூலம் தொட்டியெல்லாம் பிரபலமானவர் கேப்ரில்லா. முன்னதாக இவர் ரஜினியின் கபாலி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். கலக்கப்போவது யாரு ஷோ விற்கு பிறகு உணர்ச்சிபூர்வமான கவிதைகளை உணர்வுகள் சொட்ட சொட்ட வாசித்து நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் கேப்ரில்லா.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நாடகத்தில் நடித்து வருகிறார். இவரது நிறமே கேப்ரில்லாவை புகழின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. சுந்தரி நாடகத்தை பொருத்தவரை ஒரு கிராமத்தை சேர்ந்த ஏழைப்பெண் சிட்டியை சேர்ந்த படித்த ஒருவருக்கு மணமுடிக்கப்படுகிறாள். ஆனால் இந்த மாப்பிள்ளை சுந்தரியை ஏமாற்றிவிட்டு தனது காதலியை கரம் பிடிக்கிறார்.
விதியின் சதியால் சுந்தரி தனது கணவரின் இரண்டாவது மனைவியிடமே வேலைக்கு செல்கிறாள், அவர் மீது கொண்ட அன்பு காரணமாக தனது கணவன் தான் அவருக்கும் கணவன் என்பதை மறைத்து தன்னுடைய லட்சியமான கலெக்டர் ஆவதை குறிக்கோளாகக் கொண்டு போராடும் ஒரு அபலைப் போதையாக சுந்தரி இந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சன் டிவி டிஆர்பி-யை பொருத்தவரை சுந்தரி தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சன் டிவி குடும்ப விழாவில் சுந்தரி சீரியலுக்காக கேப்ரில்லாவிற்கு 'ஃபேவரிட் ஹீரோயின்' என்னும் விருது வழங்கப்பட்டது. அந்த விருது மேடைகளில் தனது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தாலர் கேப்ரில்லா.
இந்நிலையில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'மேடையில் பதற்றத்தில் உன்னை பற்றி பேச மறந்து விட்டேன் என்னை மன்னித்து விடு என கேப்ரில்லா குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவரின் கணவர் 'உண்மையைத் தானே சொல்ல முடியும் அம்மாவைப் பற்றி பேசியது சரியே என்கிறார். அதற்கு சுந்தரி நீதான் என் வாழ்நாள் விருது என கூறி தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.