Sundar c released audio for Anbusezhiyan

பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் மிரட்டியதன் காரணமாகவே தான் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தர்களோலை செய்துகொண்டார். அசோக் குமாரின் மரணத்தால் அமீர், விஷால், ஞானவேல் ராஜா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அன்புசெழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறும் நிலையில் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் ஆண்டனி, சீனு ராமசாமி உள்ளிட்டோர் ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜ குமாரன், “அன்புச் செழியன் பண்புள்ளவர்; மிகவும் உண்மையானவர். நான் அவரிடம் பணம் கடன் வாங்கியிருக்கிறேன். என் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அதை சரியாகத் திருப்பித் தந்துவிட்டேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், அவர் எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சி அன்புச் செழியனுக்கு ஆதரவாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 12 வருடங்களாகத் தயாரிப்பாளராக இருக்கிறேன். தயாரிப்பாளராக 'கிரி' என் முதல் படம். சினிமாவில் கந்து வட்டி என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இதுதான் உண்மை. கடந்த 8 வருடங்களாக நான் தயாரிக்கும் படங்களுக்கு அன்புவிடமிருந்துதான் பைனான்ஸ் வாங்கிவருகிறேன். அவர் ஏதோ எழுதி வாங்கிக்கொண்டார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் என்னிடமிருந்து அவர் எதையுமே எழுதி வாங்கியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து நான் தயாரித்து இயக்கும், “'கலகலப்பு 2' படத்துக்குக்கூட அவர்தான் பைனான்ஸ் செய்துள்ளார். செக் கொடுத்து இவ்வளவு பணம் என்று வாங்கியுள்ளோம். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டார் என்று மற்றவர்கள் சொல்வது எல்லாம் வடிகட்டிய பொய். எனது அனுபவத்தில் அப்படி எந்தவொரு விஷயமுமே கிடையாது. 

அதே போன்று, பட வெளியீட்டின்போது மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டுத்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று அன்புச் செழியன் எப்போதுமே நெருக்கடி கொடுத்ததே கிடையாது. சினிமா கஷ்டம் தெரிந்த பைனான்சியர் அன்பு. அவரிடம் இத்தனை ஆண்டுகள் பைனான்ஸ் வாங்கிவருகிறேன். 

இத்தனை ஆண்டுகளில் எந்தவொரு கசப்பான அனுபவம் கிடையாது. நடுராத்திரியில்கூடப் பணம் வேண்டுமானால் தொலைபேசியில் கேட்கலாம். எப்போதுமே அனுசரித்துப்போகக்கூடிய பைனான்சியர் அன்பு என புகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல என்றைக்குமே என் ஆதரவு அன்புச் செழியனுக்குதான்” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.