நடிகர் விஷால் தற்போது பிரபல டிவி ஒன்றில் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கும் பலர் பயனடைந்து வருகின்றனர். 

மக்கள் தங்கள் பிரச்சனைகளை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்ளும் போது ,அவர்களுக்காக பிரபலங்கள் தன்னாலான உதவிகளை செய்வது வழக்கம். முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறுவனுக்காக நடிகர் கார்த்தி தோசை சுட்டு ஒரு தோசை ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்து, அந்த பணத்தை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக கொடுத்து உதவினார். 

அதே போல இம்முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமிக்காக சூரி செய்த செயலை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார் அந்த பெண்.
அப்பா ,அம்மா என இருவருமே உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த சிறு பெண் தான் குடும்பத்திற்காக உழைத்து வருகிறார். அவருக்கு உதவிட சூரி இந்த நிகழ்ச்சியில் பரோட்டா விற்றிருக்கிறார். 

அதன் மூலம் கிடைத்த பணத்தை அந்த சிறுமிக்கு கொடுத்திருக்கிறார் சூரி. அந்த பண உதவியை பெற்றுக்கொண்ட சிறுமி, என் உடன் பிறந்த அண்ணன் இருந்திருந்தால் கூட எனக்காக இப்படி உழைத்து உதவி இருப்பாரா என தெரியவில்லை என நெகிழ்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பார்த்த பலரும் இதனால் நடிகர் சூரியை பாராட்டி வருகின்றனர்.