Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக முதல்வர் மகனை எதிர்த்து மாண்டியா தொகுதியில் களமிறங்கும் நடிகை சுமலதா...

காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தான் மாண்டியா தொகுதியில் போட்டியுடுவது உறுதி. அந்த முடிவில் இனி எந்த மாற்றத்துக்கும் இடமில்லை என்கிறார் நடிகை சுமலதா. இதே தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனும் போட்டியிட விரும்புவதால் பெரும்பரபரப்பு தொற்றியுள்ளது.

sumalatha to contest against nikhil kumarasamy
Author
Bangalore, First Published Mar 13, 2019, 11:05 AM IST

காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தான் மாண்டியா தொகுதியில் போட்டியுடுவது உறுதி. அந்த முடிவில் இனி எந்த மாற்றத்துக்கும் இடமில்லை என்கிறார் நடிகை சுமலதா. இதே தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனும் போட்டியிட விரும்புவதால் பெரும்பரபரப்பு தொற்றியுள்ளது.

மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமீபத்தில் காலமான பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியும், பிரபல நடிகையுமான சுமலதா போட்டியிடுவார் என்று செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வந்தன.sumalatha to contest against nikhil kumarasamy

இக்குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் நேற்று இரவு நிருபர்களைச் சந்தித்த சுமலதா அம்பரீஷ்,’’நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் துவக்கத்தில்  எனக்கு இல்லை. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களும்  தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பேரில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா?, வேண்டாமா? என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி நான் காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசினேன். 

ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கிடையே என்னைப்பற்றி பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. மேலும் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.sumalatha to contest against nikhil kumarasamy

நான் இந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா? அல்லது சுயேச்சையாக போட்டியிடுகிறேனா என்பது தான் இங்கு கேள்விக்குறி?. மற்றபடி நான் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவே இன்னும் 5 நாட்கள் முழுமையாக உள்ளது. அதற்குள் எப்படியும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். அதில் எனக்கு தகுந்தாற்போல் சில சாதகமான விஷயங்களும் நடக்கும் என்று நம்புகிறேன்’என்கிறார் சுமலதா.

Follow Us:
Download App:
  • android
  • ios