திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்போதுமே நிஜ வாழ்க்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட தொடர்களையும், திரைப்படங்களையும் உருவாக்குகிறார்கள்.
மோசடி சுகேஷ் சந்திரசேகர் - நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடையே நடந்து வரும் காதல் நாடகம் வெகுஜனங்களை மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீப காலமாக ஓடிடி தளங்கள் சர்ச்சையின் அடிப்படையில் தொடர்களை ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து, தயாரிப்பாளர் ஒருவர், சுகேஷ் மற்றும் ஜாக்குலின் கதையில் பெரும் ஆர்வம் இருப்பதாகவும், அதைப் பற்றி கற்பனையான கணக்கை உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்போதுமே நிஜ வாழ்க்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட தொடர்களையும், திரைப்படங்களையும் உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில், தற்போது நடந்து கொண்டிருக்கும் இவர்களது காதல் கதையை படமாக்க போட்டி நிலவுகிறது. இதை ஒரு திரைப்படமாகவோ அல்லது இணைய நிகழ்ச்சியாகவோ மாற்றுவது எப்படி என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விவாதித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் சுகேஷ் மற்றும் ஜாக்குலின் கேரக்டர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற ஆலோசனை நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சம்பவங்களில் இந்த காதல் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது. 
ஜாக்குலினுக்கு ரூ. 500 கோடி அளவில் சூப்பர் ஹீரோயின் திட்டத்தை தருவதாக சுகேஷ் வாக்குறுதி அளித்துள்ளார். ஜாக்குலினுக்காக தொடர்ச்சியான சூப்பர் ஹீரோயின் படங்களை தயாரிப்பதாக சுகேஷ் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. 500 கோடி பட்ஜெட்டில் இத்திட்டம் மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஒருவர் கூறுகையில், “ஜாக்குலின் பாலிவுட்டில் வாய்ப்பில்லாமல் இருப்பது சுகேஷுக்கு நன்றாகவே தெரியும். அவர் அதிக படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. அவரது நிலையை தெரிந்து அதனை பயன்படுத்திக் கொண்டு ஜாக்குலினை கவர்ந்துள்ளார். அப்போது ஹாலிவுட் VFX கலைஞர்களை வைத்து இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோயின் திட்டத்தை அவருடன் தயாரிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அது உலக அளவில் படமாக்கப்படும். ஜாக்குலினிடம் ’நீ ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை ஒத்திருக்கிறாய். நீ சூப்பர் ஹீரோயினுக்கு தகுதியானவள்’’ என சுகேஷ் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
சுகேஷின் பணமோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜாக்குலினிடம் அமலாக்க இயக்குநரகம் பலமுறை விசாரணை நடத்தியது.சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.
ஜாக்குலினை சுகேஷ் 4 முறை சென்னையில் சந்தித்திருப்பதாகவும் அவரை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து தனிவிமானத்தில் ஜாக்குலின் வர சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுகேஷ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஜாக்குலினுடன் ரெகுலராக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்:-மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆயிரம் கோடி... பெண்களின் வாக்குகளை அள்ள பிரதமர் மோடி அதிரடி..!
சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ 10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது. இவையெல்லாம் பெரும்பாலானோருக்கு தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் ஜாக்குலினை இன்னொரு விஷயத்தை கூறி தந்திரமாக சுகேஷ் ஏமாற்றியது தெரியவருகிறது.
