நடிகை சுஜா வருணி 15  வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருந்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் டான்ஸ், மற்றும் குணச்சித்திர நடிகையாக மாறியவர்.

அனைவராலும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத நடிகையாக இருந்த இவரை... தற்போது மீண்டும் நினைவு படுத்தியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம். இவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தாலும் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என பலரது கருத்தும் இருந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது... அடிக்கடி "தனக்கு அப்பா இல்லை" என்று சொல்லி பீல் பண்ணியுள்ளார். இவர் அதிகமாக பீல் பண்ணுவதை பார்த்து ஒரு முறை கமல் கூட உங்க அப்பா மூன்று மாதத்திற்குள் வருகிறாரா என்று பாருங்கள், இல்லை என்றால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடுகிறேன், உங்கள் ஆசை படி எனக்கு சாப்பாடு பரிமாறுங்கள் என கூறினார். கமலின் இந்த வார்த்தை சுஜா வருணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில், தற்போது சுஜாவுக்கும் அவருடைய காதலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய முதல் பத்திரிக்கையை நடிகர் கமலஹாசனுக்கு வைத்து, தன்னுடைய திருமணத்தை அப்பா ஸ்தானத்தில் இருந்து செய்து வைக்க வேண்டும் என சுஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்க்கு கமலும் மனதார சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் சுஜா வருணி மிகவும் சந்தோஷமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சுஜா மற்றும் அவருடைய காதலர் சிவகுமார் இருவரும் பிரபலங்களை சந்தித்து திருமண பத்திரிக்கை வைப்பதில் மிகவும் பிஸியாக உள்ளனர்.