கடந்த மாதம் துவங்கப்பட்ட, பிக்பாஸ்  மூன்றாவது சீசனுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.  பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு, ஆதரவாகவும் பிடிக்காத போட்டியாளரை வெளியேற்றவும் கூறி, சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளிலிருந்து பல ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விளையாடி வருபவர் இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. 

ஆனால் கடந்த சில தினங்களாக இவரது செயலின் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் லாஸ்லியா குறித்து ரசிகர் ஒருவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சுஜா வருணியிடம் கேள்வி எழுப்ப,  அவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள சுஜா, பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பாக விளையாடி வருபவர் அவர் தான்.  பிலாஸபியெல்லாம் பேசுகிறார்,  ஆனால் கவினுடன் கிராமத்து டாஸ்க்கில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். இது அவருடைய இரட்டை முகத்தை காட்டுவதுபோல் உள்ளது என கூறியுள்ளார்.