Asianet News TamilAsianet News Tamil

இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை! என்ன செய்தார் தெரியுமா?

Suicide threat to young actor
Suicide threat to young actor
Author
First Published Nov 10, 2017, 2:41 PM IST


அழகான இளம் நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகைகள் கூட்டமும் அதிகமாகத்தான் இருக்கும். அதே போல் தற்போது ஒரு ரசிகை மூலம் பாலிவுட் இளம் நடிகர் வருண் தவானுக்கு பிரச்னை வந்துள்ளது. 

Suicide threat to young actor

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் வருண் தவானுக்கு, ரசிகை ஒருவர் தொடர்ந்து பல மெசேஜ்  செய்து வந்துள்ளார். ஆனால் வருண் அவருடைய எந்த மெசேஜ்க்கும் ரிப்ளை செய்யவில்லை.

பின் அந்த ரசிகையின் நண்பர் ஓருவர் வருணுக்கு போன் செய்து, நீங்கள் அந்த ரசிகைக்கு பதில் கூறவில்லை என்றால் அவர் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

Suicide threat to young actor

இதனால் வருண் தவான் உடனே பந்த்ரா சைபர் செல்லில் புகார் அளித்ததோடு சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios