பொதுவாகவே, பிரபலங்கள் குறித்து எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது மிகவும் வைரலாகிவிடும். அதே போல் பிரபலங்களின் குழந்தைகள் எது செய்தாலும் அதையும் பல ரசிகர்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பாலிவுட் திரையுலகில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் ஷாருகான். இவரின் மகள் சுஹானா எப்போது திரையுலகில் அறிமுகமாவார் என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர்களின் கேள்விகளுக்கு தீனி போடுவது போல் சுஹானாவும், அவ்வப்போது பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் பார்ட்டியில் கலந்து கொள்வது, பிகினி உடை புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சுஹானா இத்தாலியில் உறவினர்கள் சிலருடன் சிவப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.இதில் அவரின் குட்டி தம்பியும் உள்ளார்.

அந்த புகைப்படம் இதோ...