For the past few days a number of pornographic images of film stars appeared on the Twitter page

கடந்த சில நாட்களாக சினிமா நட்சத்திரங்கள் பற்றி டுவிட்டர் பக்கத்தில் ஏராளமான ஆபாச படங்கள் வெளியானது. இதனை திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, தனது சொந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் திரைப்பட துறையினர் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி அலையையும் ஏற்படுத்தியது. அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் செய்தியாக வெளியானது.

இதுதொடர்பாக, திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, செய்தியாளரிடம் கூறியதாவது:-

ஒரு மாதம் முன்னாடி ஜல்லிக்கட்டு நடந்தபோது, என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு பற்றி நான் ஆதரவு தெரிவித்தாலும், பாலிவுட் நடிகர்களை தொடர்பு கொண்டு உதவி செய்யும்படி வலியுறுத்தி வந்தேன். அந்த நேரத்தில்தான் எனது பேஸ்புக் முடக்கப்பட்டது. யார் செய்தது என தெரியவில்லை. அதை உடனடியாக என்னால் சரி செய்ய முடிந்தது.

இதேபோல் எனது டுவிட்டர் பக்கத்தையும் முடக்கி வைத்துவிட்டனர். பின்னர், அதன்மூலம் சிலருடைய படங்களை, ஒரே நாள் இரவில் 20 முதல் 30 வரை படங்களும், கருத்துகளும் வெளியிட்டனர். அந்த நேரத்தில் நான், எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என கேட்டு, மெயில் அனுப்பினேன்.

அதன்படி தொழில்நுட்ப முறையில் எனது டுவிட்டர் கணக்கு 3 வாரத்துக்கு முன்னதாவே சரியாகிவிட்டது என நான் நினைத்து இருந்தேன். நான் எனது கணக்கை பார்க்காமலேயே இருந்தேன்.

இந்நிலையில் நேற்று காலை, நடிகர் தனுஷின் அலுவலகத்தில் இருந்து அதிதீ ரவிந்திரநாத் என்பவர், எனது கணவருக்கும் அவரை தெரியும். நல்ல நண்பர்.

அவர் எனக்கு போன் செய்து, உனது டுவிட்டர் கணக்கு துவங்கிவிட்டது. உடனடியாக பார்க்க வேண்டும் என கூறினார். அதை கேட்ட நான், ஏற்கனவே மெயில் அனுப்பிவிட்டோம். இப்போது என்ன ஆனது என நினைத்து டுவிட்டர் பக்கத்தை பார்த்தேன்.

அப்போது, முதல் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன். அதில் உள்ள பதிவுகளை அழித்து கொண்டே இருந்தேன், முடியவில்லை. வித்தியாசமான வித்தியாமான படங்கள் வந்து கொண்டே இருந்தன.

இதில் மற்றவர்களை மானபங்கம் செய்யும் அளவுக்கு சென்றபின்னர், போலீசாரையும் எனது வழக்கறிஞரையும் தொடர்பு கொண்டேன்.

நான் எனது டுவிட்டர் கணக்கை மீண்டும் துவங்கவில்லை. இதற்கான சான்றிதழை டுவிட்டர் இந்தியா நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் கேட்டு பெற்று கொள்ளலாம்.

எனக்கு 4.6 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். என்னுடைய வளர்ச்சியை தடுப்பதற்காகவும், பழி வாங்குவதற்காகவும் மேடையாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எனக்கு யாரை பற்றியும் எதுவும் தேவையில்லாத ஒன்று, நான் திருமணமானவள். எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. தற்போது விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினேன். அதையும் இவர்கள், நடுரோட்டில் போட்டு உடைத்துவிட்டனர். இதுமோசமான செயல். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்.

இதில் உள்ள ஒரு படத்தை ஒன்று கூட நான் பதிவேற்றவில்லை. நான் முடக்கப்பட்டதாகவே இருக்கட்டும் என இருந்துவிட்டேன். ஏற்கனவே எனக்கு பேஸ்புக்கில் இந்த அனுபவம் இருந்தது.

நேற்று கூட டுவிட்டரில் சில பதிவுகள் வந்தன. அதை நான் பார்க்கவே இல்லை. காரணம், எனது வழக்கறிஞர், அதை பார்க்கவே கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

எனக்கு எதிரி என்பதே கிடையாது. நான் தனியார் ரேடியோவில் வேலை செய்த 10 ஆண்டுகளில் எனக்கு ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். நான் ஆங்கிலம் அதிகம் பேசுவதாக சிலர் கூறுவார்கள். அதையும் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எனக்கு எதிரி என்பதே இல்லை.

இவ்வாறு அவர், பதற்றத்துடன் கூறி, முடித்தார்.