பிரபல பாடகி சுசித்ரா தற்போது என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை, ஆனால் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து பல அதிர்ச்சி கொடுக்க கூடிய தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போகிறேன், தனுஷ் என்னை தாக்கினார் என பல அதிர்ச்சியானை டுவிட்டையே போட்டு வந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது. குடித்துவிட்டு இப்படி டுவிட் செய்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.

தற்போது சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் தன்னுடைய தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுசி ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி கூறுவது தற்போது சுசித்ரா சுயநினைவை இழந்து இப்படி பேசி வருகிறாரா, என சந்தேகத்தை எழ வைத்துள்ளது. தொடர்ந்து அவரது கணவர் கார்த்தியிடம் பலர் என்ன ஆனது அவருக்கு உடல் நலம் பாதிக்க பட்டுள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.