கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் திரையுலக முன்னணி நட்சத்திரங்களின் ஆபாச படங்களும் வீடியோக்களும் வெளிவந்தது. ஒட்டுமொத்த திரையுலகமே அடுத்து யாருடைய படம் வெளிவரும் என்ற அச்சத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் வெளியான சர்ச்சைக்குரிய பதிவுகளால் தனக்கு மனநலக்குறைவு ஏற்பட்டதாகவும், தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான பதிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இதன் காரணமாக திரையுலக நண்பர்கள் தனது நட்பை கைவிட மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை தனது எதிரிக்கு கூட வரக்கூடாது என்று தெரிவித்திருக்கும் சுசித்ரா தற்போது அமெரிக்காவில் உள்ளார். விரைவில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.