suchileeks complient famous actress

இந்த ஆண்டு பல நடிகைகளை அலற விட்டது சுசி லீக்ஸ்... பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சமீபத்தில், திரிஷா, சஞ்சிதா ஷெட்டி, அனுயா, டிடி போன்ற பல நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பலரது வயிற்றில் புளியை கரைத்தது.

மேலும் சின்மயி, அமலாபால் போன்றவர்களின் வீடியோக்களும் வெளியாகும் என கூறப்பட்டது. 

இது குறித்து சுசி தன்னுடைய ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்தார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நடிகை அனுயா, சுசி லீக்சில் தன்னுடைய புகைப்படத்தை ஒரு சிலர் மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் யார் என்று தனக்கு தெரிந்தே ஆகவேண்டும் என சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.