'லைக்கா' தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான, பிரிட்டிஷ் வாழ் இலங்கை தமிழர் சுபாஷ்கரனுக்கு, அவரது  சமூக சேவைகளை பாராட்டி மலேசிய பல்கலைக்கழகம், கலாநிதி பட்டம்' வழங்கி அவரை கௌரவித்தது.

இந்த விழாவிற்கான, சிறப்பு செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்திலும்,  பிரபல நட்சத்திர ஓட்டலிலும் நடைபெற்றது. 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் தான் என்றும், ஆனால் 'கத்தி' படத்தின் ரிலீஸ் சமயத்தில் தன்னை தமிழுக்கு எதிரானவன் என சித்தரிக்கப்பட்டது என தெரிவித்தார். 

பின் ஒரு பிரஸ் மீட் வைத்து, சுபாஸ்கரன் யார்... என்பது பற்றி அவரே பேசிய பின் தான் அனைவரும் தெரிந்து கொண்டனர். தற்போது பல படங்களை அவர் தயாரித்து விட்டதாக தெரிவித்தார்.

  

மேலும் தொடர்ந்து பேசிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்,  200 ஆண்டுகள் நம்மை ஆட்சு செய்த , பிரிட்டிஷ் நாட்டிற்கு சுபாஷ்கரன் சென்று அங்கு ஆளுமை செய்து வருவதாகவும், உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ள அவர் பெரிய சாம்ராஜியத்தையே படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ்காரர்கள் இவரிடம் ஊதியத்திற்கு வேலை செய்வதாக கூறி, சுபாஷ்காரனை பெருமை படுத்தினார். 

இவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் மணிரத்னம், சுபாஷ்கரனை முதல் முறை பார்த்தபோது, இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியம் என தான் கேட்டதாக தெரிவித்த அவர், சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக கூட எடுக்கலாம் என கூறினார்.