பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் நாள் நெருங்க நெருங்க, இதில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் பற்றி பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஒருவர் நேரடியாகவே தான் மிகவும் பிஸி என அறிவித்துள்ளார்.

வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க விரும்பும் , மாடல்கள், இளம் நடிகர், நடிகைகள் என பலர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். அந்த வகையில் விரைவில் உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், நடிகைகள் அம்ரிதா ஐயர், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த லிஸ்டில் சம்மேபத்தில் இணைந்த பிரபலம் கருண் ராமன். இவர் நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களின் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் என்பதும், ஃபேஷன் கோரியோகிராபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சி லிஸ்டில் உள்ளதற்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில்  நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. நான் என்னுடைய வேலையை தேர்வு செய்வதில் மிகவும் பிஸி.  எனவே வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்  கருண் ராமன், இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.