Stunt Masters Anbariv : சென்னை புழலில் பிறந்து, மலையாள திரையுலகில் ஸ்டண்ட் இரட்டைகளாக அறிமுகமாகி இன்று நட்சத்திர ஸ்டண்ட் மாஸ்டர்களாக வளம் பெறுபவர்கள் தான் அன்பு மற்றும் அறிவு.

இன்று தங்களது 39வது பிறந்த நாளை கொண்டாடும் ஸ்டண்ட் இரட்டையர்களான அன்பு மற்றும் அறிவு, தொடக்க காலத்தில் ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன், சில்வா மற்றும் தினேஷ் சுப்புராயன் போன்ற பல முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் உதவி ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி, அதன் பிறகு மலையாள திரை உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "பேச்சுலர் பார்ட்டி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர்களாக உயர்ந்தார்கள். 

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கிய அன்பு மற்றும் அறிவு பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியிருக்கின்றார்கள். குறிப்பாக கன்னட திரையுலகையே திருப்பி போட்ட கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இவர்கள் தான் ஸ்டண்ட் மாஸ்டர்கள். 

Janhvi Kapoor: இது தான் உங்க ஃபேவரட் நம்பரா? கைக்குட்டை போன்ற டாப் அணிந்து... செல்லத்துடன் விளையாடும் ஜான்வி!

தமிழில் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்த "விக்ரம்" மற்றும் "லியோ" ஆகிய படங்களுக்கும் இவர்கள் தான் ஸ்டண்ட் மாஸ்டர்கள். இந்த 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் அனைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கும் இவர்களே ஸ்டண்ட் மாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…

தெலுங்கில் "கல்கி" மற்றும் "Game Changer", தமிழில் "இந்தியன் 2", "வேட்டையன்" மற்றும் "தக் லைஃப்" என்று பிசியான ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருக்கும் இவர்கள் கமலஹாசனின் 237வது திரைப்படத்தை இயக்கி இயக்குனர்களாக களம் காண உள்ளனர். மேலும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Star Movie Day 1 Collection: கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?