கலகலப்பு படத்தில் காமெடியனாக கலக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்

Stunt Master Gothandaraman Death : தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள கோதண்டராமன் சென்னையில் காலமானார்.

Stunt Master Gothandaraman Passed Away gan

தமிழ் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் கோதண்டராமன். 25 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினாலும், இவர் நடிகராக தான் பேமஸ் ஆனார். சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விமல், ஓவியா, மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளிவந்த கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்தின் அடியாட்களில் ஒருவராக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார் கோதண்டராமன்.

அப்படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து கூலாக அவர் செய்யும் காமெடி அட்ராசிட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஆற்றில் குளிக்கும் போது அஞ்சலி தொலைந்துபோக, அவரை தேடும்போது அம்மாவ பிடிச்சுட்டேன்... என சொல்லி சந்தானத்தை தண்ணியில் இருந்து கோதண்டராமன் தூக்கும் காட்சி எப்போ பார்த்தாலும் சலிக்காத ஒன்று. இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்தில் நடித்த கோதண்டராமன் அதன்பின் சில படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்... 74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!

Stunt Master Gothandaraman Passed Away gan

ஒரு கட்டத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு குறைந்தது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருந்த கோதண்டராமன் இன்று காலை காலமானார். சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமனுக்கு வயது 65. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான கோதண்டராமனின் உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது நண்பர்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோதண்டராமனின் மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அள்ளிக் கொடுத்த அட்லீ; முதல் பாலிவுட் படத்திலேயே கீர்த்தி சுரேஷுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios