ஷுட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பரப்பியது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் கொடுத்ததால் கோபமடைந்த மாணவர்கள் ‘தர்பார்’ படக்குழுவினர் மீது கல் வீசித் தாக்கியதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் நடமாடுகின்றன.

ஜனவரி 10 ம் தேதி மும்பையில் ஒரு கல்லூரி வளாகத்தில் தொடங்கிய ’தர்பார்’படப்பிடிப்பு 22 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பின்போது வலைதளங்களில் தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரிலீஸாவது கல்லூரி மாணவர்களால்தான் என்பதைக் கண்டுபிடித்த படக்குழுவினர் நிர்வாகத்திடம் புகார் செய்ததோடு நில்லாமல் செக்யூரிட்டிகளை பல மடங்கு அதிகப்படுத்தினர்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து மிக தொலைவில் நின்று பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் கூட விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் எரிச்சலுக்குள்ளான மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திலிருந்து படப்பிடிப்புக் குழுவினரை எப்படியாவது விரட்டி அடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரு ஹாஸ்டலின் மாடி அறைகளிலிருந்து சில மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையொட்டி படு அப் ஆன ரஜினி அடுத்த ஒரு மணி நேரம் ஷாட்டுக்கே வரவில்லையாம்.

அந்த கல்வீச்சில் ஒருவரும் காயமடையவில்லை என்றாலும் படப்பிடிப்புக்குழுவினர் பெரும் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர். இதை பெரிய பிரச்சினை ஆக்கவேண்டும் என்று ரஜினி கேட்டுக்கொண்டதால் போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை. இனி இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடந்தால் ஷூட்டிங்கை வேறு ஒரு கல்லூரி வளாகத்துக்கு ஷிஃப்ட் செய்துவிட படப்பிடிப்புக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.