Strike Khan announced that Vishal is now laughing ...

தென்னிந்திய நடிகர்கள் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்று அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவே தன்னைதான் நம்பிக் கொண்டிருக்கிறது என்று இருக்கும் நடிகர் விஷால் முதல் முறையாக சறுக்கலை சந்தித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சினிமாவுக்காக சில கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஷால் மனு மூலமாக கொடுத்தார். ஆனால், இந்த கோரிக்கைகளை அரசு கண்டுக் கொள்ளவில்லை. அதனால், மே 30 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஒட்டு மொத்த திரையுலகமும் ஈடுபடும் என்று விஷால் அதிரடியாக அறிவித்தார்.

இதற்கிடையில், விஷாலின் இந்த முடிவுக்கு சில சினிமா சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படையாக விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க விஷால் யார்? என்று கேள்வி எழுப்பி விஷாலை சாடினர்.

இதையடுத்து, மேலும் சில சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதில்லை என்று முடிவெடுத்து விஷாலை அழவைக்காத குறையாக அதிரடியாக தெரிவித்தனர்.

இந்த விவகாரங்கள் விஷால் காதுக்கு போனதுடன், மற்றவர்களின் ஆதரவு இல்லாமல் ஸ்டிரைக்கை நடத்துவது சரியாக இருக்காது, என்று அவரது கூடவே சுற்றும் நல விரும்புகளும் யோசனை தெரிவித்துள்ளனர்போலும்.

இதனால், ஸ்டிரைக்க வாபஸ் பெற்றுவிடும் முடிவை தவிர வேறு தெரியாமல் தடுமாரி இருக்கிறாராம் விஷால்.