தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை பருல் யாதவ், இவர் தமிழில் நடித்த ட்ரீம்ஸ் மற்றும் புலன்விசாரணை 2 ஆகிய படங்கள் ஒரு சில காரணத்தால் கைவிட பட்டது.

இவர் மலையாளத்தில் பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் கொடுத்து முன்னனி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டுக்கொண்டு வெளியில் வாக்கிங் சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கூட்டமாக சுற்றி திரிந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது. இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவரும் மோசமாக நாய்கள் கண்டித்துள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.