நடிகை ஹன்சிகா நடிப்பில் கடைசியாக கடந்த இரண்டு வருடங்களாக வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், தற்போது வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் உள்ளார் ஹன்சிகா.

இருப்பினும், முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் மஹா.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடையில், சுருட்டு பிடிப்பது போல் ஹன்சிகா இருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.

இதை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தில், ஹன்சிகா காதலித்து பிரேக் அப் செய்த நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட சிம்பு, ஹன்சிகா மீது படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் 'மஹா' படத்தில் நடித்துள்ள சிம்புவின் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார் படக்குழுவினர்.

பைலட் வேடத்தில் நடித்து மிரட்டியுள்ளார் சிம்பு. பார்பதற்க்கே இந்த போஸ்ற் வேற லெவலில் உள்ளது.  இந்த படத்தை மதி அழகன் Etcetera Entertainment  நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். 

 

நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நடிகை சனம் ஷெட்டி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஹன்சிகாவின் 50வது படமாக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.