நயன்தாராவின் ‘மாயா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இதனையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக்காலம்’ மற்றும் டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ என இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகிறது. 

துவங்கியது டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ படத்தின் முக்கிய பணி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நயன்தாராவின் ‘மாயா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இதனையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக்காலம்’ மற்றும் டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ என இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகிறது.

இதில் ‘கேம் ஓவர்’ திரைப்படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இதற்கு ரான் யோஹான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர் ரான் யோஹானே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.