டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி அறிமுக தேதி குறித்து அறிவிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அடுத்தடுத்து சுற்றுப்பயணம், சட்டமன்ற தேர்ந்தல் என அரசியல் களத்தில் ஏகப்பட்ட திட்டங்களையும் வகுத்து வைத்திருந்தார். எனவே கைவசம் இருந்த அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க திட்டமிட்டார். 

கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, நடிகர், நடிகைகள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் என அனைத்துமே பயோ பபுளுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. 

 

இதையும் படிங்க: சித்ரா தற்கொலை... ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு... தயாராகிறது இறுதி அறிக்கை...!

இருப்பினும் அண்ணாத்த ஷூட்டிங்கில் பணியாற்றி வந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து அண்ணாத்த ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு படக்குழு சென்னை திரும்பியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என வந்த போதும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை திடீரென ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் எதும் இன்றி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் ரத்த அழுத்த மாறுபாடு சீரானதும் சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டது. 

 

இதையும் படிங்க:  “அதுவேற வாய்... இது நாற வாய்”... சீமானை ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டி பங்கம் செய்யும் விஜய் ரசிகர்கள்...!

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சோசியல் மீடியாவில் ரஜினி நலம் பெற வேண்டி வாழ்த்து கூறி வருகின்றனர். இதனிடையே  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.