“அதுவேற வாய்... இது நாற வாய்”... சீமானை ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டி பங்கம் செய்யும் விஜய் ரசிகர்கள்...!
சீமானின் இந்த பேச்சைக் கண்டிக்கும் விதமாக தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் முதற்கொண்டு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வருனுங்கிற எண்ணமே வரக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலில் களம் காண்பார் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் தளபதி விஜய்யும் நீங்கள் நினைப்பது போல் நல்ல நடக்கும் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. அவ்வப்போது பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் விஜய், அரசியல் நிலவரங்கள் குறித்தும் கேட்டறிவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது எனக்கூறினார்.
சீமானின் இந்த பேச்சைக் கண்டிக்கும் விதமாக தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில், என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தா ஆதரிப்போம் - சீமான் (அது வேற வாய்), நடிகர்கள் அரசியலுக்கு வர எண்ணவே கூடாது - சீமான் (இது நாற வாய்) அரசியலின் நடிகன் சீமானே... எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? எனசகட்டுமேனிக்கும் சாடும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.