Asianet News TamilAsianet News Tamil

Rajamouli New Movie: ஆர்.ஆர்.ஆர் பட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலியின் 800 கோடி படம்..! யார் ஹீரோ தெரியுமா..?

Rajamouli New Movie: ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றியை தொடர்ந்து, 800 கோடி பட்ஜெட்டில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தொடங்கியுள்ளார்.

SS Rajamouli next movie is announced after RRR success
Author
Chennai, First Published Apr 1, 2022, 2:33 PM IST

ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றியை தொடர்ந்து, 800 கோடி பட்ஜெட்டில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தொடங்கியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி:

SS Rajamouli next movie is announced after RRR success

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமௌலி.  இயக்கத்தில், ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்  கடந்த வாரம் வெளியானது. இவரது படத்தில் பிரமாண்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில், உருவான பாகுபலி, மாவீரம் திரைப்படத்தில் கிராஃபிக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதால், பான் இந்தியா இயக்குனராக வலம் வருகிறார்.

SS Rajamouli next movie is announced after RRR success

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என  பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீலிஸ் தேதி ஒத்திவைப்பு:

SS Rajamouli next movie is announced after RRR success

கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டியது. அதற்காக படக்குழு பெரிய அளவில் புரொமோஷன் எல்லாம் செய்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் அப்படியே தள்ளிப்போனது. இதையடுத்து, படம் மார்ச் 25ம் தேதி திரையரங்கில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் சாதனை:

SS Rajamouli next movie is announced after RRR success

ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது. இதையடுத்து, தற்போது வரை படம்  650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

 ராஜமவுலியின் 800 கோடி படம்:

SS Rajamouli next movie is announced after RRR success

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றியை தொடர்ந்து, 800 கோடி  பட்ஜெட்டில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தொடங்கியுள்ளார். மகேஷ் பாபு  நடிப்பில் உருவாகும் இந்த படம் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜமவுலியின் யாத்தில் உருவான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களை போன்று இந்த படமும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்  பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

மேலும் படிக்க...AK 62 Update: அஜித்திற்கு ஜோடியாக நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயன்தார..? அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios