AK 62 Update: அஜித்திற்கு ஜோடியாக நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயன்தார..? அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
AK 62 Update: அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினியான, நயன்தாராவிற்கு 10 கோடியளவில் சம்பளம் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
நடிகர் அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்திய வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வலிமை. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்த நிலையில், வசூலில் பட்டையை கிளப்பியது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
'அஜித் 61’ படபிடிப்பு ஹாதராபாத்:
இதையடுத்து, வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித். ‘அஜித் 61’ படபிடிப்பு ஹாதராபாத்தில் துவங்க இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படத்தில், நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது.
அஜித்திற்கு ஜோடியாகும் நயன்தாரா:
இதையடுத்து, நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அறிவிப்பும் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது. அதன்படி, போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக கோடிக்கணக்கில் சம்பளம்:
இந்நிலையில்,AK 62 படம் குறித்தஅப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகின்றனர். அதன்படி, AK 62 படத்திற்காக அஜித்திற்கு 100 கோடியளவில் சம்பளம் நிர்ணயக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம்:
மேலும் தற்போது இப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினியான நயன்தாராவிற்கு 10 கோடியளவில் சம்பளம் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும் 10 கோடியளவில் சம்பளம் பேசுயுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும், இதன் அதிகாரப்பூர்வ தகவல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.