sruthuihassan about the london lover
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி காதல் கிசுகிசு வருவது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய நண்பர்களுடன் பேசினாலும் மீடியாக்களில் காதல் என்று தான் கூறுவார்கள்.
இதன் காரணமாக பல நடிகர், நடிகைகள் தங்களுடைய நண்பர்களுடன் வெளிநாட்டில் தான் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதே போல் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி ஒரு தகவல் வெளியாகியது.
அவர் லண்டனை சேர்ந்த நடிகர் 'மைகேல் கோர்சலே' என்பவர் மேல் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் கூறப்பட்டது. அதை ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அந்த செய்தியை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு , இந்த மாதிரியான செய்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் . இது பற்றி நான் கவலைப்படப்போவதுமில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றி நான் ஏன் வெளிப்படையாக உங்களிடம் ஏன் கூறவேண்டும், என கோபமாக கூறினாராம்.
