‘நேர்கொண்ட பார்வை’யில் நடித்தபிறகு எடுத்த முடிவா அல்லது அப்பவே அவர் அப்படித்தானா என்பது தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன். பெண்ணுக்கு அது ஒரு தகுதி என்று நினைப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்’என்று அதிர்ச்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

’விக்ரம் வேதா’, ’நேர்கொண்ட பார்வை’ படஙக்ளில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி யாருக்கும் தெளிவான பார்வை இல்லை. இப்போதும் நிறைய பேர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறைன்னு நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதும், அணுகுறதும்கூட வன்முறைதான். 

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க. இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு வந்தா வழக்கு முடியவே நிறைய வருஷம் ஆகிரும்னு நினைக்குறாங்க. அதுமட்டுமில்லாம ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, ‘எப்படி இது நடந்தது, எங்கு எல்லாம் தொட்டான்’ இதெல்லாம் கேட்பதை நிறுத்தணும். 

இதெல்லாம் சீக்கிரம் மாறிடும்னு நம்புறேன். காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. ஆனால் பெண்கள் பற்றிய பார்வை மட்டும் மாறவேயில்லை. என் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெத்துக்கிட்டாங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். குழந்தை பெத்துக்குறதுதான் பெண்களோட தகுதின்னு நினைக்கிறாங்க. என்னோட முடிவுகள வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது. என்னோட அறிவு, படிப்பு வெச்சுதான் என்னைத் தீர்மானிக்கணும்’என்று அதிரடியாகக் கூறுகிறார். நேர்கொண்ட பார்வை வரைக்கும் ஓகே. ஆனா இது வீறுகொண்ட பார்வையாயிருக்கே ஸ்ரத்தா?