குடிப்பழக்கத்தை விட்டொழித்து விட்டார் ஸ்ருதிஹாசன். அதையும் தாண்டி குடிப்பழக்கத்தை விட்டொழித்து சபரி மலை ஐய்யப்ப பக்தராகி மாலையே போட்டிருக்கிறார் சிம்பு.  இப்பதான் உடம்பு நல்லாயிருக்கு என்று பேட்டியும் கொடுத்துவிட்டார் ஸ்ருதிஹாசன். அட, இப்போதாங்க சிம்பு முகத்தில் ஆன்மீக கலையே வந்திருக்கிறது. ஆளை பார்த்தீங்களா... தேஜஸ் ஏறி சும்மா சிக்குனு இருக்கார்.

ஸ்ருதிஹாசன் மாறியது இவ்வளவு பரபரப்பாகும் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார். சிம்பு விஷயத்தில் மட்டும் என்ன சும்மாவா..? அவரது ரசிகர்களே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லையாம். அட அதுகூட பரவாயில்லை. டி.ஆர். தனது மகனின் மாற்றத்தை நினைத்து சந்தேகத்தில் அவ்வப்போது தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக் கொள்கிறாராம்.

 

மீடியாக்கள் பலவும், அது சம்பந்தமா பேசணும். எப்ப வரட்டும்? என்கிற ரேஞ்சுக்கு ஸ்ருதியை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அடப்போங்க... சிம்புவின் ஒற்றைப்போட்டோக்களை வைத்துக் கொண்டு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் ரவுண்டு காட்டி வருகிறார்கள். கொஞ்சம் நிம்மதியா விடுங்க என்று ஓட ஆரம்பித்திருக்கிறார் ஸ்ருதி. இவராவது ஒதுங்க ஆரம்பிச்சிருக்கிறார். அண்ணே சிம்பு நிம்மதியை தேடி சபரிமலைக்கே ஓடத் தயாராகிட்டாரு.  

இதற்கிடையில் ஒரு சுவாரஸ்யம். ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுடன் நடிக்கும் போது சூர்யா பேசியதை மறுபடி ரிப்பீட் அடிக்கலாம், ‘கமல் சாரின் மகள்ங்கறது முதல் பயமா போச்சு... அதனால் லவ் சீனில் நடிக்கும் போது சங்கோஜமா இருந்திச்சு’என்று கூறியிருந்தார். ஆனால் விஜய்சேதுபதி அப்படியல்ல. லாபம் படத்தில் இவருக்கு ஜோடி ஸ்ருதிதான். படப்பிடிப்பில் படு கேஷுவலாக இருக்கிறார்கள் இருவரும். பெரிய வீட்டு பொண்ணு என்கிற பதற்றமே இல்லையாம் சேதுவுக்கு...

இந்த விஷயத்தில் சிம்புவிடம் மாற்றம் இல்லாமலா போய்விடும். கால்ஷீட் கொடுத்து விட்டு சிம்புவை நெருங்க முடியாமல் திணறித்தவித்த தயாரிப்பாளர்களிடம் ரிப்போட் அடித்து சங்கோஜப்படாமல் கிடப்பில் போட்ட படங்களை தொடரலாம் என சிம்புவே சொல்வதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பிறகு இன்னொரு விஷயம் தெரியுமா? சிம்பு மாலை போட்டு இருப்பதால் நட்பு நடிகைகள் படு கேஷுவலாக போன்போட்டு பதற்றமே இல்லாமல் சிம்புவிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார்களாம்... சாமி சரணம்... அநியாயத்திற்கு நல்வழிக்கு வந்த ஸ்ருதிக்கும், சிம்புவுக்கும் நல்லதே நடக்கட்டும்... சரணம் ஐயப்பா.