13 ஆண்டுகளாக தனது மூன்றாவது ஜோடியுடன் குடித்தனம் நடத்தி வந்தார் கமல். பத்திரிக்கைகளுக்கு மிகபெரிய செய்தியாக மாறிப்போனது கமல் கவுதமியின் பிரிவு.

இதனை தொடர்ந்து கமல் கவுதமியின் பிரிவுக்கு என காரணம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்காமலேயே அலசி ஆராய்ந்து எழுத தொடங்கி விட்டன ஊடகங்கள்.

அதிலும் கவுதமியின் மகள் சுப்புலட்சுமிக்காக வாழ்கையை துறந்தார்கள் என்று ஒரு சாராரும், கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஆப்பு வைத்து விட்டார் என்று மற்றொரு சாராரும் எழுத தொடங்கி விட்டனர்.

சும்மாவே பொங்கு பொங்கு என பொங்குவார் ஸ்ருதிஹாசன். அவரை பற்றி பேசினால் சும்மா விட்டுவிடுவாரா என்ன?

இது தொடர்பாக தனது உதவியாளர் மூலமாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "யாரை பற்றியும் ஸ்ருதிஹாசனுக்கு பேச வேண்டிய அவசியம் எப்போதும் இருந்ததில்லை,

யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவுகளிலும் ஸ்ருதிஹாசன் தலையிட்டதில்லை.அவர் தன் குடும்பத்தின் மீது பாசமும் அன்பும் எப்போதும் வைத்திருந்தார்.

அவருக்கு அது சரியாக கிடைத்து வந்தது. ஸ்ருதிஹாசனுக்கு அவரது தந்தை அவரது தங்கை என குடும்ப உறவுகள் பலமான பாலமாக உள்ளார்கள்.

இதை விட வேறு என்ன வேண்டும் அவருக்கு" என்று காரசாரமாக அந்த அறிக்கையில் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.