தெலுங்கு திரையுலகில், பட வாய்ப்பு தருவதாக தன்னை பயன்படுத்தி கொண்டு, பல பிரபலங்கள் ஏமாற்றி விட்டதாக நடிக்க வாய்ப்பு தேடி வந்த ஸ்ரீரெட்டி, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதனை யாரும் கண்டு கொள்ளாததால், தெலுங்கு பிலிம் சாம்பேர் முன், அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இதை தொடர்ந்து, தமிழ் திரையுலகின் பக்கம் இவருடைய பார்வை திரும்பியது. நடிகர் ஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் என இவர் புகார் கூறிய பிரபலங்களின் லிஸ்டும் நீண்டு கொண்டே போனது.

மேலும் அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் கூறி வந்த இவர்,  சமீபத்தில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். 

இதுகுறித்து கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகியோர், தங்களை பற்றி உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி கூறி வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாக விமர்சித்து பேசிய வீடியோவையும் ஆதாரமாக கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி பேசியிருந்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.