சர்ச்சை நடிகை என அனைவராலும் பார்க்கப்படும், ஸ்ரீரெட்டி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். ஏற்கனவே 'ஸ்ரீரெட்டியின் டைரி' மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது நாம் அறிந்தது தான். இதை தொடர்ந்து, இவர் சற்றும் எதிர் பாராத பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஸ்ரீரெட்டி சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரெட்டி தற்போது தெலுங்கில் உருவாகி வரும், மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் அவர்களின் இரண்டாவது மனைவியான லட்சுமி சிவபார்வதியை மையப்படுத்தி உருவாகும் 'லட்சுமி வீரகிரந்தம்' என்கிற படத்தில் லட்சுமி சிவபார்வதியாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக பல, முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றம்சாட்டி வந்த இவருக்கு, தெலுங்கில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைப்பது போல் இந்த படம் அமைந்துள்ளதாக அனைவரிடமும் கூறி தன்னுடைய மகழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி.

ஆரம்ப காலத்தில், பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய பிரபலங்கள் பெயரை இவர் வெளியிட்ட போது, இவரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இதற்கு நியாயம் கேட்டு ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிலிம் சாம்பர் முன் நிர்வாண போராட்டத்தில் குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.