sripriya replay for fan
கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் அரசியலுக்கு வருவது குறித்து பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இவர்களைப் பற்றி தொலைக்காட்சிகளில் இவர்கள் அரசியலுக்கு வருவார்களா, வரமாட்டார்களா... யாருடன் கூட்டணி வைப்பார்கள் என நிறைய விவாதங்கள் நடக்கின்றன.
இது குறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில், கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவது என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது குறித்த விவாதமே போய்க் கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார்.

இதற்கு ஒரு ரசிகர், அதில் போன தடவை ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தீங்க. இப்ப எவ்வளவு கொடுப்பீங்கனு வேட்பாளர்கள் கிட்ட மக்கள் ஓபனா கேட்குறாங்க. அவ்வளவு பணத்துக்கு கமலும், ரஜினியும் எங்கே போவாங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஸ்ரீபிரியா நீங்கள் ஒருமுறை ஓட்டிற்கு பணம் பெற்று உங்களுடைய ஓட்டுரிமையை விற்று விட்டாலே இதைப் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டீர்கள் என அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.
