srilankan fans spend lakh of amout in vijay mersal cut out
அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று வேடத்தில் நடித்து... மூன்று நாயகிகளுடன் டூயட் பாடியுள்ள மெர்சல் படத்தின் விஜயை பார்க்க விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆரவாரத்தோடு தயாராகி வருகின்றனர்.
அதே நேரத்தில், கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் மெர்சலுக்கு வரும் பிரச்சனைகளும் நீண்டுகொண்டே போகிறது.

ஆனால் படம் வெளியாகும் என உறுதியான தகவல்களும் படக்குழுவினரிடம் இருந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் ஏற்கனவே வெளிநாடுகளில் மெர்சல் படத்திற்கான டிக்கெட் முன் பதிவுகள் முடிந்து விட்டது. அதே போல் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் மெர்சல் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
தமிழகத்தை விட மெர்சல் படத்தை வரவேற்க மிகவும் தீவிரமாக உள்ளனர் இலங்கை ரசிகர்கள். மெர்சலை வரவேற்கும் விதத்தில் 80 அடியில் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இதற்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம்.

மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட் அவுட் வைக்க 2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம் இலங்கை ரசிகர்கள்.
