Sri Devi is injured in the neck

54 வயதிலும் 35 வயது தோற்றத்துடன் வளம் வந்து மூத்த நடிகைகள் பலரை ஆச்சர்யப்படுத்தியவர் ஸ்ரீ தேவி. இவருடைய மரணம் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீ தேவியின் மறைவுக்கு தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள மும்பைக்கும் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீ தேவியின் மரணத்தில் புது சர்ச்சை எழுந்துள்ளது. குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்தார் என்று கூறப்படும் நடிகை ஸ்ரீ தேவியின் கழுத்தில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ தேவியின் இந்த திடீர் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இதன் காரணமாக கூட ஸ்ரீ தேவி உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டுவர தாமதமாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் போலிசாரின் விசாரணைக்கு பின்னரே மரணம் தொடர்பான மர்மம் நீங்கும் என்றும் இப்படி ஒரு தகவல் வெளியானாலும் கீழே விழுந்த பொது எதிர்பாராத விதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.