ஸ்ரீதேவி என்கிற பெயருக்கு ஏற்றப்போல் அழகு குறையாமல் மிளிர்தவர் நடிகை ஸ்ரீதேவி. தற்போது வரை நடிகை ஸ்ரீ தேவி இறந்ததாக வெளியான தகவல் கனவாக மாறிவிடக் கூடாத என பலர் ஏங்குகின்றனர். அந்த அளவிற்கு நல்ல குணத்தால் பிரபலங்கள் மத்தியிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மத்தியிலும் நிலைத்து நின்றவர்.

அழகின் மீது அதிக அக்கறைக காட்டும் இவர், தன்னுடைய அழகை மேம்படுதிக்கொள்ள பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்துக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது நடிகை ஸ்ரீதேவியின், இறுதி ஊர்வலம் நடைப்பெற்று வருகிறது. சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட வண்டியில் மகராணி போல் குடும்பத்தினர் இவரை கொண்டு செல்கினறனர்.

மேலும் நடிகை ஸ்ரீ தேவிக்கு பிடித்த நிறமான சிவப்பு நிற பட்டுப்புடவை அணிவித்து. நகைகள், பெரிய பொட்டு, கண்களில் மஸ்காரா, உதட்டில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஆகிய மேக்கப் போட்டு அழகு குறையாமல் எடுத்துச் செல்லப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்.