sridevi dauther issue
90 களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வருகிறார், சில வருடங்களுக்கு முன் இவர் நடித்து வெளிவந்த "இங்கிலிஷ் விங்கிலீஷ்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த ரீ என்ட்ரி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தற்போது "மாம்" என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வரும் இவருக்கு "கோலிவுட்டிலும்" "பாலிவுட்டிலும்" இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர்.
இவரை தொடர்ந்து ஸ்ரீதேவியின் மகள் "ஜானவி" பாலிவுட் திரைப்படத்தில் "வருண் தவான்னுக்கு" ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்து தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் தன்னுடைய மகளை எப்படியும் முன்னணி நடிகையாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலுள்ள ஸ்ரீதேவிக்கு, வெளியில் சொல்லமுடியாத வேதனையை கொடுத்துள்ளது தன்னுடைய மகளின் நடவடிக்கை.
எப்போதும் பார்ட்டி , பப் என குடியும் கூத்துமாக உள்ள மகளுடைய செல் போன் ஸ்ரீதேவியிடம் கிடைக்க,
அதில் தன்னுடைய மகளை பற்றி பல அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் இருந்துள்ளது.

இதை பார்த்து ஒரு நிமிடம் ஆடி போன ஸ்ரீதேவி, இதனை தன்னுடைய கணவர் 'போனி கபூரிடம்' காண்பித்து கதறி அழுதுள்ளார். மேலும் முழு நேரமும் தன்னுடைய மூத்த மகளை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து கொண்டிருக்கிறாராம்.
மகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு, ஜானவியை வீட்டிலேயே சிறை வைத்துள்ளார் ஸ்ரீதேவி, என்று பாலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு.
