தண்ணீரில் அணைந்து தகனத்தில் முடிந்த சிவகாசி பட்டாசு: ஸ்ரீ தேவி....!

கடந்த சனிகிழமை,பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி துபாயில்தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.

முதலில் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில்,அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும்,அதனால்  மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் என்றும் ஐக்கிய அரபு  அமீரகம்  சான்றிதழ் வழங்கி நேற்று  இரவு இந்தியா கொண்டுவரப் பட்டது  ஸ்ரீ தேவியின் உடல்...

அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின்  உடல்  இன்னும் சற்று நேரத்தில் மும்பையில் தகனம் செய்யப்பட உள்ளது.

சொந்த ஊர்

ஸ்ரீ தேவிக்கு சொந் ஊர் சிவகாசி அருகில் உள்ள ஒருகிராமம். வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து வந்த குடும்பத்தினர்.

ஸ்ரீ தேவியின் அப்பா,காங்கிரஸ் கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்.அவர் மட்டுமில்லாமல் ஸ்ரீ தேவியின் உறவினர்கள் கூட சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்கள்.குடும்பமே ஒரு அரசியல் சாயம் கொண்டவர்கள் தான்....

சிவகாசி  பட்டாசு

சிவகாசி என்றாலே பட்டாசு தான் ஞாபகம் வரும்,அப்படிப்பட்ட சிவகாசி  பட்டாசு  போன்று பட பட வென்றும்,சுறு சுறுப்பாக தன்னுடைய நடிப்பில் பட்டாசு கிளப்பியவர்  தான் ஸ்ரீ தேவி....

கோலிவுட் முதல் பாலிவுட் அவரை

கோலிவுட் முதல் பாலிவுட் அவரை  நடிப்பால் இந்தியாவையே தன் பக்கம் ஈர்த்தவர்.. அவருடைய எளிமையான  நடத்தை அனைவராலும் கவரப்பட்டது.....

அப்படிப்பட்ட சிவகாசி பட்டாசு துபாய் சென்ற போது,தண்ணீரில் அணைந்துவிட்டது...

இவருடைய இறுதி ஊர்வலம் ராஜ மரியாதையுடன்  மகாராஷ்டிர அரசு செய்து வருகிறது....

தண்ணீரில் அணைந்த  சிவகாசி பட்டாசு இன்னும் சற்று நேரத்தில்  தகனம் செய்யப்பட உள்ளது...