தெலுங்கு திரையுலகில் பல இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

பின் சில தமிழ் பிரபலங்கள் குறித்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  இதைத்தொடர்ந்து சென்னையில் குடியேறிய ஸ்ரீரெட்டி 'ரெட்டி டைரி' ,என்கிற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பல பிரபலங்கள், முகத்திரையை கிழித்து உள்ளதாக கூறியுள்ளார்.  மேலும் ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அவ்வபோது, தன் மனதில் பட்ட கருத்துக்களை கூறி சில சர்ச்சைகளிலும் சிக்கி வரும் ஸ்ரீரெட்டி தற்போது மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா பற்றி, பதிவிட்டுள்ள  ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது...  "நடிகை சில்க் சுமிதாவை பல முன்னணி ஹீரோக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த மாதிரி சைக்கிள்களை எப்படி லெஜெண்ட்ஸ் என கூற முடியும். சினிமா அரைசியலில் அவரை இழந்து விட்டோம்.  எப்போதும் உங்களை மறக்க மாட்டோம் சில்க் ஸ்மிதா என் கூறியுள்ளார். இந்த பதிவு தான் தற்போது புது சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது.