நடிகை ஸ்ரீரெட்டி ஆரம்பத்தில் தெலுங்கு திரையுலகில், இவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பிரபலங்கள் குறித்து தைரியமாக 'ஸ்ரீலீக்ஸ்' என்ற பெயரில் வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனால் இவருக்கு தெலுங்கு திரையுலகில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. 

இதன் காரணமாக தற்போது இவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்காததால், பொருளாதாரா ரீதியாகவும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக ஸ்ரீரெட்டி சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில், தற்போது தமிழ்லீக்ஸ் என்கிற பெயரில் தமிழ் பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டு கோடம்பாக்கத்தையே பரபரப்பாக்கி உள்ளார்.  இதுவரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, சந்தீப் கிஷன், லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலகள் பெயரை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

இதைதொடர்ந்து தற்போது மற்றொரு குற்றச்சாட்டை லாரன்ஸ் மீது சுமற்றியுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில், "தமிழ் நாட்டு மக்களால் உயர்ந்த மனிதராக பார்க்கப்படும் ராகவா லாரன்ஸ் என்னை மற்றும் ஏமாற்றவில்லை. எனக்கு தெரிந்த மற்றொரு பெண் என், தோழியை கூட ஏமாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்த குற்றத்தை லாரன்ஸ் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் அந்த உண்மையும் வெளியாகும் என ஆவேசமாக கூறியுள்ளர். 

விளம்பரத்திற்காக இப்படியா?

தொடர்ந்து பல நடிகர்கள் பெயர்களையும், அனைவர் மத்தியிலும் நற்பெயரை பெற்றுள்ள லாரன்ஸ் குறித்து இப்படி பட்ட குற்றங்களை சுமற்றுவது விளம்பரத்திற்கா என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீரெட்டி, "கண்டிப்பாக நான் இதை என்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக செய்யவில்லை. நான் கூறுவது ஒரு வாரத்திற்கான செய்தி என்பது எனக்கு நன்றாக தெரியும். மேலும் இப்படி பலரையும் நான் விமர்சித்து பேசுவதால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதையும் நான் அறிவேன். நான் இப்படி பட்ட தகவல்களை கூற காரணம் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் பெண்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்கு மட்டுமே இதனால் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.