மதகஜ ராஜா, ஆம்பள படத்தை தொடர்ந்து 3வது முறையாக சுந்தர் சி - விஷால் கூட்டணி கைகோர்த்துள்ள படம் "ஆக்‌ஷன்". இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஐஸ்வர்யா லட்சுமி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் ரிலீஸ் ஆகாததால் விஷாலின் ஆக்‌ஷன் படத்திற்கு அடித்தது லக்கி பிரைஸ். சங்கத்தமிழன் ஓட வேண்டிய திரையரங்குகளிலும் ஆக்‌ஷன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. டிரெய்லரில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இடம் பெற்ற சண்டை காட்சிகள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: சோலேவா ரிலீஸ் ஆகி கெத்து காட்டும் "ஆக்‌ஷன்"... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

எதற்கு என்றே தெரியாத சண்டை காட்சிகள் ரசிகர்களை மிகவும் சோர்வடைய வைத்துள்ளது. இதனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.என்னதான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. படம் சுமார் ரகம் தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், விஷாலின் தோழியான கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள முகநூல் பதிவு படத்திற்கு பெரிய ஆப்பாக அமைந்துள்ளது. 

நேற்று உலகம் முழுவதும் வெளியான ஆக்‌ஷன் திரைப்படத்தை பார்த்த விஷாலின் நெருங்கிய தோழியான ஸ்ரீரெட்டி படம் பற்றிய தனது கமெண்ட்டை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விஷால் படம் பிலோ ஆவ்ரேஜ், பாவம், சாரி விஷால் ரெட்டி" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆக்‌ஷன் திரைப்படம் சராசரிக்கும் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் ஏற்கெனவே சிக்கலில் சிக்கியுள்ள விஷால் திரைப்படத்திற்கு மிகப்பெரிய சறுக்கலாக மாறியுள்ளது.