நடிகர் அஜித்தை கட்டிப்பிடித்து முத்தம் தர ஆசைப்படுவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.  எந்தக் காமமும் இல்லாமல் அன்பு மிகுந்த முத்தமாக அந்த முத்தம் இருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதன் மூலம்,  தெலுங்கு மற்றும் தமிழ்  திரையுலகில் அனல் கிளப்பினார் ஸ்ரீ ரெட்டி,  அத்துடன் அப்பாலியல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரைநிர்வாண போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தார் ஸ்ரீரெட்டி. 

குறிப்பாக தமிழில் இரண்டாம் தரவரிசை ஹீரோக்கள் மீது குற்றச்சாட்டு வைத்து பூகம்பத்தை ஏற்படுத்திய அவர் தற்போது சென்னையிலேயே குடியேறி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சை அத்துடன் நிறைய கிளுகிளுப்பு என்று அவர் பெயர் வாங்கியுள்ள நிலையில்.  சமீபத்தில் சென்னையில் பேஷன் ஷோ ஒன்றில் அவர் கலந்து கொண்டார், அப்போது அவரிடன்  நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அதில், சினிமா கதாநாயகர்களுக்கு முத்தம் கொடுக்க விரும்பினால் யாருக்கு கொடுப்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு சற்றும் தயங்காமல்,  நடிகர் அஜீத்துக்குதான் முத்தம் கொடுக்க விரும்புகிறேன் என பளீரென பதிலளித்தார்.  அந்த முத்தம் எந்தக் காமமும் இல்லாமல் அவருக்கு கொடுக்க மனதார்ந்த முத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை படுவதற்கான  காரணம்,  அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான் இந்த படத்தில் அஜித் மூன்று பெண்களுக்கு நியாயம்  கிடைக்கப் போராடியுள்ளார். அதேபோன்ற பல இன்னல்களை நானும் அனுபவித்து உள்ளேன் என ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்று  கூறப்பட்டு வந்த நிலையில் அவர்  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.