தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர். படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறினார். தன்னை பல நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர் என ஸ்ரீரெட்டி கூறிய பட்டியலில், இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என நீளமான பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். பட வாய்ப்பிற்காக இப்படி ஸ்ரீரெட்டி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என அவரது குற்றச்சாட்டுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கரை திரும்பிய இந்த புயல், கொஞ்சம் காலத்திற்கு ஏனோ நடிகர் விஷாலையே டார்கெட் செய்து கொண்டிருந்தது. மேலும் அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் கூறி வந்த இவர்,  சமீபத்தில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். 

இதையும் படிங்க: வெற்றிமாறனால் வந்த வினை... படுக்கையறை சீனுக்கே கூப்பிடுறாங்க... பிரபல நடிகையின் வேதனை...!

இதுகுறித்து கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகியோர், தங்களை பற்றி உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி கூறி வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாக விமர்சித்து பேசிய வீடியோவையும் ஆதாரமாக கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி பேசியிருந்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முந்துங்கள்... முந்துங்கள்... இந்தியர்களுக்கு முன்னுரிமை... ரஷ்ய மாடலின் அதிரடி அறிவிப்பு...!

கைதுக்கு பயந்து ஸ்ரீரெட்டி தலைமறைவாகி இருப்பார் என்று பார்த்தால் திடீரென அகோரியாக மாறி ஆட்டம் போட்டு வருகிறார். என்னது இது புதுவிதமான தலைமறைவா...? அப்படின்னு கேட்காதீங்க. மகாசிவராத்திரியை முன்னிட்டு, நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிவன், பார்வதி, அகோரி என விதவிதமாக வேடமிட்டு ஆட்டம் போட்டுள்ள ஸ்ரீரெட்டி, சிவன் மீது கொண்ட காதலால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கட்சி பார்டர் போட்ட சேலையில்....அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய கங்கனா...செகண்ட் லுக்கில் மாஸ் காட்டிய "தலைவி"!

ஸ்ரீரெட்டி சின்ன போட்டோ போட்டால் கூட மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள், இந்த வீடியோவை மட்டும் விட்டுவைப்பாங்களா...? என்ன செம்ம கலாய், கலாய்ச்சிருப்பாங்க போல. அதனால் தனது யூ-டியூப் பக்கத்தின்  கமெண்ட்டை ஆப் செய்துவைத்துவிட்டார்.