ஏ.எல். விஜய் இயக்கத்தில் கே.வி. விஜயேந்திர பிரசாத் எழுத்தில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், பிரபல நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், அவரது மனைவியாக ஜானகியாக மதுபாலாவும் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சின்ன டீசரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் கங்கனாவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம ஆப்செட் ஆகினர். ப்ராஸ்தெடிக் மேக்கப்பில் வெளியான கங்கனாவின் லுக்கில் ஜெயலலிதாவை காண முடியவில்லை என ரசிகர்கள் கேலி செய்தனர். சோசியல் மீடியாவில் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலான போதும், நெகட்டீவ் கமெண்ட்ஸ்களே அதிகம் கிடைத்தன. 

ஆனால் அதன் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளன்று வெளியான அரவிந்த் சாமியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிறப்பான வரவேற்பை பெற்றது. அச்சு அசலாக எம்.ஜி.ஆர். போலவே இருந்த அரவிந்த் சாமியின் போஸ்டரை ரசிகர்கள் மாஸாக கொண்டாடினர். அத்துடன் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் டீசரையும் வெளியிட்டிருந்தனர். அதில் அப்படியே எம்.ஜி.ஆர். போலவே அரவிந்த் சாமி நடனமாடியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று கங்கனா ரனாவத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை கங்கனாவின் சகோதரியும், மேனேஜருமான ரங்கோலி சந்தெல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நியூ லுக் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

அதற்கு காரணம், அதிமுக கட்சி பார்டர் போட்ட புடவையில் பார்க்க அச்சு, அசலாக அப்படியே ஜெயலலிதாவாகவே மாறியுள்ளார் கங்கனா ரனாவத். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னவொரு மாற்றம் என வாய்பிளந்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது மீம்ஸ் மூலம் தன்னை மரண பங்கம் செய்த ரசிகர்களை தனது நியூ லுக்கில் கதி கலங்க செய்துள்ளார் கங்கனா ரனாவத்.