என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு, நடிகை ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம், திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்டால், படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பாலிவுட் தொடங்கி, கோலிவுட் வரை பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்மீது நடிகைகள் புகார் கூறி வரும் நிலையில், படுக்கைக்கு அழைத்து அனுபவித்துவிட்டு, வாய்ப்பு தரவில்லை எனக் கூறி, தெலுங்குதிரையுலகினர் மீது நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டினார்.
 
தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டி கிளப்பிய புயல் ஓய்வதற்குள், கோலிவுட் பக்கம் திரும்பிய அவர், இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்சி., நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் குற்றஞ்சாட்டு வைத்ததுடன், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னையில்தங்கியிருந்து, பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து, தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
 
நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ்த் திரையுலகமே மிரட்சியில் இருந்த நிலையில், சிவா மனசுல புஷ்பா என்ற படத்தைதயாரித்து, இயக்கி, நடித்த வாராகி என்பவர், நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த்திரையுலக பிரபலங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டுவருவதாகவும், அவர் மீது விபச்சார தடுப்புப் பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாராகி தனது மனுவில்கூறியிருந்தார்.
 
வாராகியின் இந்த புகாரால் கடும் அதிர்ச்சி அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னை அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்க தகுதியானவர்தான். பாதிக்கப்பட்ட பெண் நான்.

எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறீர்கள்” என்றுகடுமையாக கூறியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தான் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட யூட்யூப் சேனல்களுக்கு அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.