யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். 

மேலும் நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் இந்த ஆட்சிக்கு எதிராக ஏகப்பட்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இவர் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் சுயமாக செயல்பட மாட்டார் என்றும் அவரை பின்னணியில் உள்ள சக்திதான் இயக்கும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது சமூக வலைத்தளத்தில்,அரசியல் பிரச்னைகள் முடிந்துவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இனி தான் பிரச்சனை தொடங்கியுள்ளது என்பது அவர்களுக்கு புரியாது என்று கூறியுள்ளார். 

இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் மேலும் தமிழக மக்களாவது இதை புரிந்து கொண்டு தங்களுக்கு யார் முதல்வராக வர வேண்டும் என்று தங்களுடைய எம்.எல்.ஏக்களிடம் பேச வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் எம்எல்ஏக்கள் ஓட்டு கேட்டுவரும் போது கைகளை கட்டிக்கொண்டு பதவிக்காக ஓட்டு கேட்கின்றனர். ஆனால் மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டிய நேரம் இது. மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டை காப்பாற்ற அவர்களிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.