sri devi death friend share shocking news

அழகில் சிறந்த நடிகையான இவர் இன்று உலகில் இல்லை என்கிற உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது.

மேலும் நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சிலரும் மும்பைக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், இவரின் மரணம் குறித்து பேசியுள்ள ஸ்ரீ தேவியின் நெருங்கிய உறவினர் சஞ்சய்கபூர், இதுவரை ஸ்ரீ தேவிக்கு மாரடைப்பு வந்ததில்லை என்றும், இவருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் வயதானாலும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என அவர் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சைகள் தான் என கூறியுள்ளார். 
இதே கருத்தை ஸ்ரீ தேவியின் நெருங்கிய தோழி பியூஷ் கங்குலியும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கூறியுள்ள இவர்... ஸ்ரீ தேவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும், இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ தேவி தொடர்ச்சியாக பல அறுவை சிகிச்சைகளை செய்துக்கொண்டார். பிறப்பிலேயே நல்ல அழகை கொண்ட ஸ்ரீ தேவி அதனை நம்பாமல் அறுவை சிகிச்சைகளை செய்துக்கொண்டு செயற்கை அழகை தான் நம்பினார். இது குறித்து பல முறை யார் கூறியும் அவர் கேட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ தேவி மட்டும் அறுவை சிகிச்சைகளை தவிர்த்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்திருப்பர் என்பது உண்மை. ஸ்ரீ தேவியின் மரணம் பெண்களுக்கு ஒரு பாடம்... செயற்கையான சைஸ் ஜீரோ உடலமைப்பை விட இயற்கையான அழகே ஆரோக்கியமானது நல்லது என்று ஸ்ரீ தேவியின் தோழி தெரிவித்துள்ளார்.