sri devi death 16th day function ajith and shalini paid homage
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி 16 வயதினிலே படத்திம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இதையடுத்து ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த ஸ்ரீ தேவி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது கடந்த மாதம் 24 ஆம் தேதி ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.
இதளையடுத்து பல கட்ட விசாரணைக்குப் பிறகு அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
