MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரிகள் சங்கத்திற்கான எலெக்‌ஷன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிந்தாமணியை எதிர்த்து மீனா போட்டியிடுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2026, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, தன்னை தாக்கிய மனோஜ் மற்றும் விஜயா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் அமைப்பு ஒன்றில் புகார் அளித்திருந்தார். இதனால் விஜயாவை கைது செய்யும் அளவுக்கு அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார் அந்த பெண், பின்னர் மனோஜை பேசி சமாளித்து அவரை அந்த அதிகாரியை சந்திக்க வைத்து அவரிடம் எல்லா உண்மையையும் எடுத்து கூறிய பின்னரே ரோகிணி பற்றிய உண்மை அவருக்கு தெரியவந்தது. இதனால் ரோகிணியின் பிளான் மொத்தமும் சொதப்பலாக முடிந்திருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சிந்தாமணிக்கு வந்த பதவி ஆசை
Image Credit : jiohotstar

சிந்தாமணிக்கு வந்த பதவி ஆசை

இன்றைய எபிசோடில் சிந்தாமணியின் வீட்டுக்கு பூ வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சில கும்பலாக வந்திருந்தனர். அவர்கள் சிந்தாமணியிடம் நமது சங்கத்தில் எலெக்‌ஷன் வர இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அதற்கு சிந்தாமணி, இதுவரை நான் கை காட்டும் நபர்களை ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள். அதேபோல் இந்த தேர்தலிலும் நல்ல ஒரு ஆளை நிப்பாட்டி ஜெயிக்க வைப்போம் என கூறுகிறார். ஆனால் அவர்கள் இந்த தேர்தலில் வேறு யாரும் நிற்க வேண்டாம், நீங்களே போட்டியிடுங்கள் என அவர்கள் சிந்தாமணியிடம் வலியுறுத்துகிறார்கள். முதலில் மறுக்கும் சிந்தாமணி பின்னர் ஓகே சொல்லிவிடுகிறார்.

Related Articles

Related image1
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Related image2
சதிகாரி சிந்தாமணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா... அதிரடி திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
35
போட்டியிடும் மீனா
Image Credit : jiohotstar

போட்டியிடும் மீனா

மறுபுறம் பூ வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த மேலும் சிலர், மீனாவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். முத்துவின் கார் ஷெட்டில் வைத்து இந்த சந்திப்பு நடக்கிறது. அப்போது பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு மீனாவை போட்டியிடுமாறு கூறுகிறார்கள். அதற்கு மீனா, தனக்கு இந்த பதவியெல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். ஆனால் அவர்கள் உங்களை எதிர்த்து சிந்தாமணி தான் போட்டிபோடப் போகிறார் என்று சொன்னதும், அவரை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்து தேர்தலில் களமிறங்க சம்மதம் தெரிவித்துள்ளார் மீனா. இதனால் முத்துவும் செம ஹாப்பியாக இருக்கிறார்.

45
சதி செய்யும் சிந்தாமணி
Image Credit : jiohotstar

சதி செய்யும் சிந்தாமணி

மீனா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த விஷயம் அறிந்த சிந்தாமணி ஆட்கள், அவரிடம் நேரிலேயே சென்று விஷயத்தை சொல்கிறார்கள். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிந்தாமணி, நீங்க நல்லா பார்த்திருக்க மாட்டீங்க, வேறு மீனாவாக இருக்கும் என கூறுகிறார். ஆனால் அவர்கள் முத்துவின் மனைவி மீனா தான் என்று அழுத்தமாக சொன்னதும், அவளை போட்டியிட விடாமல் தடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக விஜயாவிடம் போன் போட்டு பேசும் சிந்தாமணி, தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டும் என ஒரு ரெஸ்டாரண்டுக்கு அவரை வர வைக்கிறார்,.

55
விஜயாவிடம் ஏத்திவிட்ட சிந்தாமணி
Image Credit : jiohotstar

விஜயாவிடம் ஏத்திவிட்ட சிந்தாமணி

இதையடுத்து சிந்தாமணியை சந்திக்க விஜயா அந்த ரெஸ்டாரண்டுக்கு சென்ற நிலையில், அங்கு பொக்கே உடன் அமர்ந்திருந்த சிந்தாமணி, உங்க மருமகள் எலெக்‌ஷன்ல நிற்க போறதுக்கு வாழ்த்துக்கள் என கூறி பொக்கே கொடுக்கிறார். அதுமட்டு்மின்றி அவள் மட்டும் இந்த தேர்தலில் ஜெயித்தால், விஜயா வீடு எங்க இருக்குனு கேட்க மாட்டாங்க, தலைவி மீனா வீடு எங்க இருக்குனு தான் கேட்பார்கள். உங்களையும் தலைவி மீனாவின் மாமியார் என்று தான் அழைப்பார்கள் என சொல்லி ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈஸ்வரி உடன் அவுட்டிங் சென்ற குணசேகரன்.... வயிற்றெரிச்சலில் ஜனனி எடுக்கும் முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!
Recommended image3
கோமதி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்; கதறி அழுத பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
சதிகாரி சிந்தாமணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா... அதிரடி திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved